Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தொடர்ந்து 3வது மாதம்! ஜிஎஸ்டி வசூலை வாரிக்குவிக்கும் இந்தியா!

தொடர்ந்து 3வது மாதம்! ஜிஎஸ்டி வசூலை வாரிக்குவிக்கும் இந்தியா!
GST revenue rises to 2.03 lakh crore rupees in September

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த செப்டம்பர் மாதம் 14.70 சதவீதம் அதிகரித்து, ரூ.2.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

புதுடெல்லி:

இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் கடந்த செப்டம்பர் மாதம் 14.70 சதவீதம் அதிகரித்து, ரூ.2.04 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.1.77 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஆகஸ்டில் 14.30 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம், செப்டம்பரில் 14.70 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது. ஜூலையில் ரூ.2.11 லட்சம் கோடியாகவும், ஆகஸ்டில் ரூ.2 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வசூல் உயர்வுக்கு இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் முக்கியப் பங்காற்றியுள்ளது. இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வசூல் 25.90 சதவீதம் அதிகரித்து ரூ.65,525 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.52,031 கோடியாக இருந்தது.

உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் 10.10 சதவீதம் உயர்ந்து ரூ.1.38 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது. மேலும், செப்டம்பரில் மொத்த வசூலைவிட நிகர ஜிஎஸ்டி வசூல் வேகமாக அதிகரித்துள்ளது.

வரி திருப்பித் தரும் தொகை குறைந்ததன் காரணமாக, நிகர ஜிஎஸ்டி வசூல் 18.10 சதவீதம் உயர்ந்து ரூ.1.77 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்தது. உள்நாட்டு நிகர ஜிஎஸ்டி வருவாய் 13.50 சதவீதம் உயர்ந்து ரூ.1.24 லட்சம் கோடியாகவும், இறக்குமதி தொடர்பான நிகர ஜிஎஸ்டி வசூல் 30.80 சதவீதம் அதிகரித்து ரூ.52,028 கோடியாகவும் உள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.12.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.11.17 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 11.6 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் உள்நாட்டு மொத்த ஜிஎஸ்டி வருவாய் 6.10 சதவீதம் அதிகரித்து ரூ.8.74 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் 27.10 சதவீதம் உயர்ந்து ரூ.3.72 லட்சம் கோடியாகவும் உள்ளது.

கடந்த ஏப்ரல்–செப்டம்பர் காலத்தில் நிகர ஜிஎஸ்டி வசூல் 10.40 சதவீதம் அதிகரித்து ரூ.10.66 லட்சம் கோடியாகியுள்ளது. இதேகாலத்தில் வரி திருப்பித் தரப்பட்ட தொகை 18.80 சதவீதம் அதிகரித்து ரூ.1.80 லட்சம் கோடியாக உள்ளது.

தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் 5 % சரிவு
நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 14.70% அதிகரித்து ரூ.2.04 லட்சம் கோடியாக உயர்ந்தது. மாநிலங்கள் வாரியாக அதிகபட்சமாக, அசாம் 88 சதவீத வளர்ச்சியையும், ஜம்மு காஷ்மீர் 29 சதவீத சரிவையும் பதிவு செய்துள்ளன. எனினும், தமிழகத்தின் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டு ரூ.10,670 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.10,188 கோடியாக,5 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

செப்டம்பர் ஜிஎஸ்டி வசூல் ஒப்பீடு

மாநிலம் செப். 2025 (ரூ.கோடி) செப். 2026(ரூ.கோடி) வளர்ச்சி
அசாம் 1,287 2,415 88%
மணிப்பூர் 37 92 145%
அருணாசலப் பிரதேசம் 93 136 46%
மகாராஷ்டிரா 25,973 29,986 15%
கர்நாடகா 12,001 13,884 16%
குஜராத் 10,419 12,222 17%
உத்தர பிரதேசம் 7,516 8,882 18%
தெலங்கானா 4,512 5,327 18%
டெல்லி 5,691 6,354 12%
மேற்குவங்கம் 5,229 5,549 6%
ராஜஸ்தான் 4,165 4,151 0%
தமிழ்நாடு 10,670 10,188 -5%
இமாச்சல பிரதேசம் 815 640 -21%
உத்தராகண்ட் 1,665 1,277 -23%
ஜம்மு-காஷ்மீர் 690 487 -29%



முந்தைய செய்தி
ஜவுளி நிறுவனங்களின் பசுமை முதலீடுகளுக்கு நிதியுதவி! ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கிய முடிவு
அடுத்த செய்தி
ரூ.1,499-க்கு 4ஜி போன் - ஜியோ சிறப்பு சலுகை

தொடர்புடைய செய்திகள்